என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண் குழந்தை பலி"
மதுரை:
மதுரை எஸ்.எஸ்.காலனி பொன்மேனி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் தேவசேனா (வயது1½). நேற்று தேவசேனா வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் நிரம்பிய பானையில் கைகளை வைத்து விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அவரது தாயார் வெளியே சென்றதாக தெரிகிறது.
இந்த நேரத்தில் விளையாடிக்கொண்டிருந்த தேவசேனா திடீரென்று தண்ணீர் பானைக்குள் தவறி விழுந்தாள். சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது தாயார் மகளை மீட்டார். அப்போது தேவசேனா சரியாக மூச்சுவிட முடியாமல் திணறினாள்.
உடனே அக்கம் பக்கத்தினர் குழந்தையை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி தேவசேனா பரிதாபமாக இறந்தாள்.
இந்த சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு இதில் சிலர் பலியாகி உள்ளனர். இதையொட்டி தமிழகம் முழுவதும் தீவிர தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்திலும் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் இல்லாவிட்டாலும் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஈரோடு கோபி, சத்தியமங்கலம், அந்தியூர், பவானி உள்பட பல பகுதிகளில் பலர் விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் சுகாதாரதுறை சார்பிலும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே 9 மாத பெண் குழந்தை மர்ம காய்ச்சலுக்கு பலியாகி விட்டது.
இந்த குழந்தையின் பெயர் நைனிகா. அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான மாரிமுத்து - தமிழரசி ஆகிய தம்பதியினரின் மகள் ஆவாள்.
கடந்த 4 நாட்களுக்கு முன் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அந்தியூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட குழந்தை நைனிகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு வீட்டுக்கு திரும்பினர்.
இந்த நிலையில் குழந்தைக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்படவே மீண்டும் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். கதறி அழுதனர்.
இந்த நிலையில் அந்த தம்பதியினருக்கு மீண்டும் ஒரு பேரிடியாக பலியான குழந்தை நைனிகாவின் அக்கா இந்துமதி (வயது 3)க்கும் காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சலால் அவதிப்பட்ட சிறுமி இந்துமதியை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அந்தியூர் ஒலகடம் பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
கோவை:
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பன்றி, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதார துறை சார்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தில்லை நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு கடந்த 58 நாட்களுக்கு முன்பு அக்ஷயா என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் மற்றும் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்தது.
இதற்காக குழந்தையை அவரது பெற்றோர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. நேற்று திடீரென குழந்தையின் உடல் நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து குழந்தையை டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும், பன்றி காய்ச்சலுக்கு 4 பேரும், பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் 12 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 61 பேரும் என மொத்தம் 79 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதே போல கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதிப்புடன் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது சின்னவீரம்பட்டி கிராமம். இன்று அதிகாலை அந்த வழியே சென்ற சிலர் அங்குள்ள சாக்கடை கால்வாயை பார்த்தபோது பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தை தொப்புள் கொடி அகற்றப்படாமல் இறந்து கிடந்தது.
அந்த சாக்கடை அருகே ஒரு இளம்பெண்ணும் மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி பொதுமக்கள் இது குறித்து உடுமலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி. ஜெய்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
சாக்கடை கால்வாயில் இறந்து கிடந்த சிசுவை மீட்டனர். மேலும் மயங்கிய நிலையில் கிடந்த பெண்ணை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பெண்ணின் அருகே ஒரு கைப்பை இருந்தது. அதை எடுத்து போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அதில் இருந்த செல்போனை எடுத்து போலீசார் அதில் உள்ள எண்களை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மனைவி துர்கா என்ற ரேணுகா (வயது 23) என்பது தெரியவந்தது.
கர்ப்பிணியாக இருந்த துர்கா கணவருடன் கோபித்துக் கொண்டு திருப்பூருக்கு வேலைக்கு வந்தார். நேற்று காலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு இருக்கிறது. அப்போது திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு பதிலாக தவறுதலாக உடுமலை சின்னவீரம் பட்டிக்கு வந்து இருக்கிறார்.
பின்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு சாக்கடை அருகே நேற்று மாலை முதல் படுத்து இருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு இருக்கிறது.
அப்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. சாக்கடை அருகே இருந்ததால் குழந்தை உருண்டு ஓடி சாக்கடைக்குள் விழுந்து பரிதாபமாக இறந்ததது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் கோவைக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். #tamilnews
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் திருச்சூர் வடக்காஞ்சேரி எடமுட்டம் பகுதியை சேர்ந்தவர் சுக்கூர். இவரது மனைவி சஜினா. இவர்களது 1 ½ வயது மகள் பாத்திமா. நேற்று மாலை சஜினா சமையல் செய்தார். சுக்கூர் வெளியே சென்றார். குழந்தை பாத்திமா அங்கு விளையாடியது.
சிறிது நேரம் கழித்து வெளியே சென்ற சுக்கூர் வீட்டிற்கு வந்தார். மகளை தேடியபோது காணவில்லை. இது குறித்து மனைவியிடம் கேட்டபோது அவரும் தேடினார். அங்கு விளையாடிய குழந்தை மாயமானது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் தேடினர். வீட்டின் பின்புறம் பார்த்தபோது அங்குள்ள பக்கெட்டில் குழந்தை விழுந்து கிடந்தது.
மயங்கிய நிலையில் மீட்டு குழந்தையை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பாத்திமா பரிதாபமாக இறந்தது.
இது குறித்து வடக்காஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்